இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதலா?. லடாக்கில் பதற்றம்!. உண்மை என்ன?.
Soldiers Clash: லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
லடாக்கின் துர்புக் செக்டரில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே உள்ள பர்ட்சே பகுதியில் திங்கள்கிழமை காலை 4 மணி அளவில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே மோதல்கள் நடந்ததாக கூறப்பட்டது . சீன துருப்புக்கள் LAC இன் இந்தியப் பக்கத்தில் உள்ள இரண்டு RCC குடிசைகளை எரித்ததில் இருந்து பிரச்சனை தொடங்கியது. இதைத் தொடர்ந்து இந்திய மற்றும் சீனாவின் பிஎல்ஏ படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மோதல் நடந்த பகுதி 81 காலாட்படை படைப்பிரிவின் கீழ் வருகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. LAC பில்லர் பாயிண்ட் 12 க்கு அருகில் ஒரு பட்டாலியன் அப்பகுதியில் இருந்து மாற்றப்படும் போது சிறிய மோதல்கள் நடந்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில், கிழக்கு லடாக்கில் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) இந்திய - சீனா வீரர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக வெளியான செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் X தளத்தில், இருநாட்டு வீரர்களிடையேயான மோதல் குறித்த செய்தி "போலி" என்றும் அத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளது. இதுபோன்ற "போலி செய்திகளுக்கு" எதிராக பொதுமக்கள் தங்களைக் காத்துக் கொள்ளுமாறும் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக, ஜூன் 2020 ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பு வீரர்களும் இடையேயான மோதலில் ஒரு கர்னல் உட்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: Alert…! காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!