JUSTIN | தொடங்கியது புதிய விமான சேவை..!! அயோத்தியில் இருந்து 8 முக்கிய நகரங்களுக்கு பறக்கும் விமானங்கள்.!
இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றான அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்திற்கு மகாரிஷி வால்மீகி விமான நிலையம் என பெயரிடப்பட்டது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அயோத்தி நகருக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து இருக்கிறது. இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து அயோத்தி நகருக்கு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் "அயோத்தி நகருக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக புதிய 8 வழித்தடங்களில் விமான சேவைகள் இன்று முதல் தொடங்கப்படும் என அறிவித்திருக்கிறது. அயோத்தியில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி அகமதாபாத், ஜெய்பூர் பாட்னா, பெங்களூர் மற்றும் தார்பாங்கா உப்பட 8 நகரங்களுக்கு இன்று முதல் விமான சேவைகள் தொடங்கப்படுகிறது.