குடிமகன்கள் அதிர்ச்சி..!! தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!! வெளியாகும் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல், முக்கிய கோயில் திருவிழாக்களின் போதும், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவின் பேரின் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
அந்த வகையில் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி முளைப்பாரி எடுத்தும் பாலபிஷேகம் செய்யும் நிகழ்வும் நடைபெறும்.
முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள். இதன் காரணமாக பல்வேறு உத்தரவுகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அந்த வகையில் தான், ராமநாதபுரத்தில் அக்டோபர் 28, 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட கடந்தாண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல், இந்தாண்டும் இதுதொடர்பான உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.