ஆரம்பமே அலரும் அதிகாரிகள்... 2023-ல் நடந்த சந்திரபாபு நாயுடு கைது.. சிஐடி கூடுதல் டிஜிபி அமெரிக்கா ஓட்டம்...!
கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அப்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடு கைது தொடர்ந்து, ஆந்திர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தெலுங்கு தேசம் கட்சியினர் அதிகாலை முதலே அவரவர் வீடுகளிலேயே கைது செய்து செய்யப்பட்டனர். அதனையும் மீறி வெளியே வந்து போராட்டம் நடத்தியவர்கள் ஏராளமானோரை போலீஸார் கைது செய்தனர். இது ஆந்திரா அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அரசியல் அரசியல் பலி வாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இதன் எதிரொலியாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி தற்பொழுது ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் முடிவு வெளியான பிறகு முதன்மை செயலாளர் ஜவகரிடம் சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் ஒரு நாள் முன்னதாக விடுமுறை அளித்தது போல் கையெழுத்திட்டு வழங்கினார். இதனால் சஞ்சய் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். இதையறிந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு டெல்லி செல்வதற்கு முன்பு தன்னை சந்திக்க மரியாதை நிமித்தமாக வீட்டிற்கு வந்த முதன்மை செயலாளர் ஜவகரிடம் 20 நிமிடங்கள் பேசி உள்ளார். அப்போது சஞ்சய்யை ஏன் விடுப்பில் அனுப்பினீர்கள் என கோபமடைந்ததாக சொல்லப்படுகிறது.