உங்க கூந்தலில் எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, இந்த ஒரு சட்னி போதும்.. வித்தியாசத்த நீங்களே பாப்பீங்க..
தற்போது உள்ள காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே முடி பிரச்சனை உள்ளது. இதற்க்கு வாழ்க்கை முறை, கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, மாசு உணவு பழக்கம் போன்ற பல காரணங்கள் உள்ளது. இதற்காக விலை உயர்ந்த ஷாம்பூ மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இது போன்ற எண்ணெய் மற்றும் ஷம்பூவால் முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளிக்க முடியாது. இதற்கு ஒரே தீர்வு, நம் உணவு பழக்கங்களை மாற்றுவது தான்.
நமது முன்னோர் கருவேப்பிலையை அதிகம் தங்களின் உணவில் சேர்த்து வந்தனர், அதனால் அவர்களுக்கு நம்மை போன்ற பிரச்சனைகள் இருந்தது இல்லை. ஆனால் தற்போது உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் இருக்கும் கருவேப்பிலையை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு தான் சாப்பிடுகின்றனர். இதனால் தான் இந்த தலைமுறையினருக்கு கூந்தல் பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இதனால் நீங்கள் கருவேப்பிலையை சட்னியாக அரைத்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் அது உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சுவையான கருவேப்பிலை சட்னி செய்ய, முதலில் ஒரு கடாயில் எண்ணெய்யை சேர்த்து காய்ந்ததும் அதனுடன் உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம், வர மிளகாய், நிலக் கடலை ஆகியவற்றை நன்கு வறுக்கவும். பின்னர் துருவிய தேங்காய், புளி இவை அனைத்தையும் நன்கு வதக்கி அதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். அனைத்தும் வதங்கியதும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். பின்னர் எப்போதும் போல கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். இதை சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா அனைத்திற்க்கும் சாப்பிடலாம்.
Read more: “அண்ணி, ஒழுங்கா என்கூட உல்லாசமா இருங்க” ஆசைக்கு இணங்க மறுத்ததால், பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..