முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இயேசு பிறந்த இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து!… களையிழந்த பெத்லகேம்!… இஸ்ரேல் - ஹமாஸ் போர் பதற்றம்!

08:59 AM Dec 25, 2023 IST | 1newsnationuser3
Advertisement

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும்நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமாக கருதப்படும் பெத்லகேமில் இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், உக்ரைன்-ரஷ்யா போர், உலக பொருளாதாரம், கோவிட் தொற்று, சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள், சாதிய, மத, இன மோதல்கள் என இந்த ஓராண்டில் ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்நிலையில், புத்தாண்டுக்கு முன்னோட்டமாக இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

"புறாக்களை போல கபடமில்லாமல் இருங்கள்" என்கிற யேசுவின் பொன்மொழியை பிரதிபலிக்கும் பொருட்டு, ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு இன்று அன்பை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கொருவர், இனிப்பு, புத்தாடை, அன்பு மொழி பரமாரிக்கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு 12 மணியளவில் தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

சர்வதேச அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். போர்கள் நடைபெறும் இந்த நேரத்தில் மக்கள் நல் வாழ்விற்காகவும் உலக அமைதிக்காகவும் தேவ மைந்தனிடம் மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

ஆனால், இயேசு கிறிஸ்து பிறந்ததாக கருதப்படும், பெத்லகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளதாக அங்குள்ள தேவாலய பாதிரியார்கள் கூறியுள்ளனர். மேலும், இன்று இயேசு பிறந்திருந்தால், அவர் காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்திருப்பார் என்று, காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள குழந்தைகள் குறித்து பாதிரியார்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாஸ்தீனியர்கள் இந்த போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
BethlehemChristmas celebrationsIsrael-Hamas warஇயேசு பிறந்த இடம்இஸ்ரேல் - ஹமாஸ் போர்களையிழந்த பெத்லகேம்கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து
Advertisement
Next Article