பாலியல் வழக்கில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி..!! அறிவிக்கப்பட்ட தேசிய விருதை ரத்து செய்வதாக அறிவிப்பு..!!
நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, தேசிய அளவிலும் பிரபலமாகி, திரையில் வைரலாக பரவி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் பல நடன அசைவுகளுக்கு நடனம் அமைத்துள்ளார். இவருக்கு, தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடனம் அமைத்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜானி மாஸ்டர் தன்னிடம் பணிபுரிந்த பெண் உதவியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்பதால், ஜானி மாஸ்டர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்திவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தேசிய விருதை பெற ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினார். விசாரணையின் முடிவில், டெல்லியில் தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க அக்டோபர் 6 முதல் 10 வரை அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் ஜானி மாஸ்டரின் ஜாமீன் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. போக்சோ வழக்கில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதை திரும்பப் பெறுவதாக விருது வழங்கும் கமிட்டி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.