முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"எப்புட்றா."! இளைஞரின் மூளையில் "சாப்ஸ்டிக்ஸ்".! மருத்துவர்கள் குழப்பம்.! நடந்தது என்ன.?

12:31 PM Nov 30, 2023 IST | 1newsnationuser4
Advertisement

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மூளையில் உணவு சாப்பிட பயன்படும் சாப் ஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அந்தக் குச்சி அகற்றப்பட்டுள்ளது.

Advertisement

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞர் தலைவலி மற்றும் மயக்கம் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிடி ஸ்கேன் மூலம் அவரது மூளையில் சாப் ஸ்டிக் இருப்பதை கண்டறிந்தனர். எனினும் இந்த குச்சி எப்படி அவரது மூளைக்கு சென்றது என்பது மருத்துவர்களுக்கே புரியவில்லை.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐந்து மாதங்களுக்கு முன்பு மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதலில் ஒரு நபர் கூர்மையான பொருளால் தனது மூக்கில் தாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார். அப்போது உடைந்த சாப் ஸ்டிக் துண்டுகள் மூக்கின் வழியாக அவரது மூளையை சென்றடைந்து இருக்கிறது என மருத்துவர்கள் தெரிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையின் மூலம் அவரது மூளையில் இருந்த குச்சி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது அந்த நபர் சுயநினைவுடன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த நபருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :
brainChopsticksdoctorShocking reportvietnam
Advertisement
Next Article