முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

CHINA | சானிட்டரி பேட் போன்ற வடிவமைப்பில் சீனாவில் கட்டப்படும் ரயில் நிலையம்.!! இணையதளத்தில் வைரலான புகைப்படம்.!!

02:03 PM Apr 17, 2024 IST | Mohisha
Advertisement

CHINA: சீனாவின் நாஞ்சிங் வடக்கு ரயில் நிலையத்திற்கான முன்மொழியப்பட்ட வடிவமைப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. மேலும் இந்த புகைப்படம் உயிரோட்டமான விவாதங்களைத் தூண்டி இருக்கிறது. இந்த ரயில் நிலையம் தொடர்பான பெரும்பாலான விவாதங்கள் அதன் செயல்பாடு மற்றும் பட்ஜெட் பற்றியதாக இல்லாமல் ரயில் நிலையத்தின் வடிவமைப்பு பற்றியதாக இருக்கிறது.

Advertisement

பிளம் மலர்களால் ஈர்க்கப்பட்டு, வடக்கு நான்ஜிங் நிலையத்தின் வடிவமைப்பு இருப்பதாக பிசிசி தெரிவித்திருக்கிறது. எனினும் நெட்டிசன்கள் இந்த ரயில் நிலையத்தின் தோற்றம் ஒரு ராட்சத சானிட்டரி பேட் போல் உள்ளது தெரிவித்துள்ளனர். இந்த வடிவமைப்பை பிளம் ப்ளாசம் போல் இருக்கிறது என்று சொல்வது வெட்கமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளனர்.

நான்ஜிங் டெய்லி செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலின் படி நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்திற்கான ஆரம்ப வடிவமைப்பு ஜியாங்சு மாகாணம் மற்றும் சீனா(CHINA) ஸ்டேட் ரயில்வே குழுமத்தின் அனுமதி பெற்று இருக்கிறது எனவும் இந்த ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் 2024 ஆம் வருடத்தின் முதல் பாதியில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மர கூரைகள் மற்றும் ஜன்னல் வடிவங்கள் போன்ற பல்வேறு பாரம்பரிய சீன கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு கலாச்சார பாரம்பரியத்துடன் நவீனத்துவத்தை கலந்து இந்த ரயில் நிலையம் கட்டப்பட இருக்கிறது.

இந்தத் திட்டம் சுமார் 20 பில்லியன் சீன யுவான்(23 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கிறது. மேலும் 37.6 சதுர கிலோமீட்டர் (14 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த ரயில் நிலையம் சீனா கட்டிடக்கலையின் ட்ரெண்டை பின்பற்றுகிறது. தனித்துவமான கட்டிடக்கலை வடிவங்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்க்கிறது. பெய்ஜிங்கில் உள்ள சிசிடிவி தலைமையகத்தின் கட்டிட வடிவமைப்பு புகைப்படங்கள் சமூக வலைதள வாசிகளின் கவனத்தை ஈர்த்து விமர்சிக்கப்பட்டன. சிலர் அதன் வடிவத்தை "பெரிய குத்துச்சண்டை ஷார்ட்ஸ்" என்று விமர்சனம் செய்தனர்.

Read More: அடுத்த 5 நாட்கள்..!! மக்களே வெளிய போகாதீங்க..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Advertisement
Next Article