அடுத்தடுத்து தங்க வேட்டையில் சீனா!. 61 பதக்கங்களுடன் கெத்து காட்டும் US!. 50 இடங்களுக்குபின் தள்ளப்பட்ட இந்தியா!.
Olympic medals: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கும் சீனா, இதுவரை 16 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடர் பின்னடைவில் இருக்கும் இந்தியா, பட்டியில் 54வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் நாடாக சீனா தங்கப் பதக்கத்தை வென்றது. இந்நிலையில், 8 நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அந்தவகையில் நேற்றைய (ஆகஸ்ட் 3) முடிவில் அட்டவணையில் பதக்க எண்ணிக்கை மற்றும் சிறப்பம்சங்களில் எந்தெந்த நாடுகள் முன்னிலை வகிக்கின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அந்தவகையில், சீனா 16 தங்கப்பதங்களை தட்டித்தூக்கி பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. சீனாவுக்கு இணையாக போட்டிகளில் தீவிரமாக இருக்கும் அமெரிக்கா, மொத்தம் 61 பதக்கங்களை குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதன்படி, இதன்படி, 16 தங்கம், 12வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 14 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் அமெரிக்கா 2வது இடத்திலும், 12 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் 3வது இடத்தில் பிரான்ஸும், 12 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 27 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், 10 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என 33 பதக்கங்களுடன் பிரிட்டன் 5வது இடத்திலும்,
தென்கொரியா 7 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் 6வது இடத்திலும், ஜப்பான் 8 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் 7வது இடத்திலும், 6 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் இத்தாலி 8வது இடத்திலும் உள்ளது. 3 வெண்கல பதக்கத்துடன் இந்தியா 54வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Readmore: 50 நாட்களை கடந்த பயணம்!. சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?. ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்!