தொடர் தங்க வேட்டையில் சீனா!. போட்டிப்போடும் அமெரிக்கா!. திணறும் இந்தியா!. 10ம் நாள் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்!
Olympic Medals: தொடர்ந்து பெரும் சரிவை சந்தித்து வரும் இந்தியா, இந்த பதக்க பட்டியலில் 60 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் 33வது ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்கியது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் 32 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் இடம் பிடித்துள்ளனர்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்தியா மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது. அமெரிக்கா பதக்க எண்ணிக்கையில் முன்னணியில் இருந்த போதும், அதிக தங்க பதக்கங்களை வெல்லாததால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தொடரில் கடந்த இரண்டு முறையும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி இருந்தது. இந்த முறையும் அந்த போட்டி தொடர்கிறது. அமெரிக்கா வழக்கம் போல பதக்கங்களை குவித்து வருகிறது. ஆனால், இந்த முறை ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 நாள் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அமெரிக்கா 20 தங்கம், 30 வெள்ளி மற்றும் 28 வெண்கலம் என 78 பதக்கங்களை குவித்துள்ளது.
மறுபுறம். சீனா 53 பதக்கங்களை மட்டுமே வென்று இருந்த போதும், அதிக தங்க பதக்கங்களை வென்று முதல் இடத்தை பிடித்து உள்ளது. சீனா 21 தங்கம், 18 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. சீனாவை விட அமெரிக்கா அதிக தங்க பதக்கங்களை வென்றால் முதல் இடத்தை பிடிக்கலாம்.
இந்த பதக்கப் பட்டியலில், மூன்றாவது இடத்தில் 13 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என 32 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரை நடத்தும் ஃபிரான்ஸ் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. அந்த நாடு 12 தங்கம், 16 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளது. 5வது இடத்தில் இருக்கும் பிரிட்டன் 12 தங்கம், 13 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் வென்று உள்ளது. 6வது இடத்தில் தென்கொரியா உள்ளது. அந்த நாடு 11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜப்பான், இத்தாலி அணிகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து பெரும் சரிவை சந்தித்து வரும் இந்தியா, இந்த பதக்க பட்டியலில் 60 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்று உள்ளது. இந்தியா, வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை வென்றால் மட்டுமே இந்த பதக்கப்பட்டியலில் வேகமாக முன்னேற முடியும்.
Readmore: வன்முறை உச்சம்!. பிரதமர் ஷேக் ஹசீனாவின் உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் அட்டூழியம்!