For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Heart Attack | குழந்தைகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.!! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு.!!

04:38 PM May 04, 2024 IST | Mohisha
heart attack   குழந்தைகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்    அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு
Advertisement

Heart Attack: மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவது பிற்காலத்தில் அபாயகரமான இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு(Heart Attack) போன்ற தீவிர இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை 4 மடங்கு அதிகரிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. உலக அளவில் உள்ள இளைஞர்களின் 15 பேரில் ஒருவரை இந்த நிலை பாதிக்கும் எனவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இளம் வயதினருடைய அதிகரித்து வரும் ரத்த அழுத்தத்தின் தாக்கம் கவலை அளிப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

உயர் ரத்த அழுத்தத்தின் தாக்கத்தை அளவீடு செய்ய கனடாவின் ஒன்டாரியோவில் 1996 மற்றும் 2021 க்கு இடையில் உயர் இரத்த அழுத்தத்தால் கண்டறியப்பட்ட 25,605 இளைஞர்களின் தரவை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். தொடர்ந்து 13 ஆண்டு காலம் ஆய்வு செய்ததில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு பக்கவாதம் இதய செயலிழப்பு மற்றும் இதை அறுவை சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகம் இருப்பதாக முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

தீவிர இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கு குழந்தை பருவத்தில் இருந்தே உயர் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் செய்யப்படுவதை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். குழந்தைகளுக்கான இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டுக்கு அதிக ஆதாரங்களை ஒதுக்குவது உயர் இரத்த அழுத்தம் உள்ள குழந்தைகளின் நீண்டகால இதய நிலைகளின் அபாயங்களைக் குறைக்கும்" என்று கனடாவில் உள்ள நோயுற்ற குழந்தைகளுக்கான மருத்துவமனையின் குழந்தை சிறுநீரகவியல் மருத்துவர் ராபின்சன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான உயர் ரத்த அழுத்த பரிசோதனைகள் மற்றும் பாலோ அப் சிகிச்சைகள் எதிர்காலத்தில் அவர்கள் கடுமையான இதய நோய்களால் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க உதவும் எனவும் ராபின்சன் தெரிவித்துள்ளார். மே 3-6 தேதிகளில் டொராண்டோவில் நடைபெறும் குழந்தை மருத்துவக் கல்விச் சங்கங்கள் (PAS) 2024 கூட்டத்தில் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சமர்ப்பிக்கப்படும் எனவும் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

Read More: ரூ.40,000 கோடி பத்திரங்களை திரும்பப்பெறும் மத்திய அரசு.!! RBI திடீர் அறிவிப்பு.!!

Advertisement