எச்சரிக்கை!!! பெற்றோரின் கவனக்குறைவால் துடிதுடித்து உயிரிழந்த குழந்தைகள்..
சமீப காலமாக குழந்தைகள் உயிரிழக்கும் செய்திகளை அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்க்கு குழந்தைகளின் விளையாட்டுத்தனம் ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் பெற்றோரின் கவனக்குறைவும் காரணம். அந்த வகையில், தற்போது பெற்றோரின் குஜராத் மாநிலத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பண்ணையி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில், மத்திய பிரதேசம் மாநிலம், தார் பகுதியை சேர்ந்த வெவ்வேறு தம்பதிகள் வேலை செய்து வந்துள்ளனர். இங்கு வேலை செய்யும் தம்பதிகள் அனைவரும் தங்களின் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். காலையில், பெற்றோர்கள் அனைவரும் வேலைக்கு சென்ற பின், அவர்களின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது வழக்கம்.
அந்த வகையில், வழக்கம் போல் கடந்த சனிக்கிழமை பெற்றோர்கள் அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில், அவர்களின் பிள்ளைகள் அங்கு விளையாடியுள்ளனர். அப்போது அந்த குழந்தைகள், அங்கு இருந்த கார் ஒன்றில் ஏறி அமர்ந்து விளையாடியுள்ளனர். அப்போது அவர்கள் எதிர்பார்த்த விதமாக, விளையாட்டு ஆர்வத்தில் காருக்குள் சிக்கிக்கொண்டனர். குழந்தைகளுக்கு காரின் ஜன்னலையும் திறக்க முடியாமல் திணறியுள்ளனர். குழந்தைகள் காலையில் இருந்து மாலை வரை அதில் இருந்த நிலையில், சுமார் 2 வயது முதல் 7 வயதுடைய குழந்தை வரை நால்வரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர், மாலையில் காரின் ஓட்டுநர் வந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பெற்றோரும் குழந்தைகள் எங்காவது விளையாட சென்றிருப்பார்கள் என அலட்சியமாக இருந்து விட்டனர். பெற்றோர்கள், தங்களின் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்திருந்தால் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்காது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த குழைந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.