முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்றோர்களே எச்சரிக்கை!!! மிட்டாய் சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை..

child was dead after eating chocolate
07:22 PM Nov 07, 2024 IST | Saranya
Advertisement

சமீப காலமாக குழந்தைகளின் மரணம் அதிகரித்து வருகிறது. இதற்க்கு பெற்றோரின் அலட்சியம் முக்கிய காரணம். குழந்தைகளுக்கு கையில் என்ன கொடுக்க வேண்டும் என்பது பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில் தாயின் அலட்சியத்தால் குழந்தை ஒன்று உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர், பர்ரா ஜரௌலி கட்டம்-1ல் வசித்து வருபவர் சோனாலிகா. இவருக்கு 4 வயது மகன் உள்ளார். சம்பவத்தன்று, குழந்தை பக்கத்து கடையில் இருந்து வாங்கிய ஃப்ரூடோலா மிட்டாய் என்றழைக்கப்படும் கண் வடிவிலான பபிள்கம் ஒன்றை சாப்பிட்டுள்ளான். அப்போது அந்த மிட்டாய் குழந்தையின் தொண்டையில் சிக்கி உள்ளது. தனது குழந்தையின் தொண்டையில், மிட்டாய் சிக்கி இருப்பதை அறிந்த தாய் சோனாலிகா, உடனடியாக சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்து முழுங்க கூறியுள்ளார். இதனால் சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டிருந்த பபிள்கம், தொண்டையில் ஆழமாக நழுவி மேலும் சிக்கலாக்கியது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளது.  

இதனால் பதறிப்போன குழந்தையின் உறவினர்கள், உடனடியாக குழந்தையை வீட்டிருகே இருந்த உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் குழந்தையின் தொண்டையில் இருந்து பபிள்கம்மை எடுக்க முடியவில்லை. பண்டிகை காலம் என்பதால் பெரும்பாலான உள்ளூர் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. இதனால் உறவினர்கள் குழந்தையை நான்கு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களால் குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லை. சுமார் 3 மணி நேரம் போராடிய பின்னர் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டோஃபி சாக்லேட் உற்பத்தியாளர் குழந்தையின் மரணத்திற்கு பதில் கூற வேண்டும் என உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Read more: “ஒரே ரூமில் இருந்த 8 பேர்…”; அலறியடித்து வெளியே ஓடிய நடிகை..

Tags :
childChocolatedeath
Advertisement
Next Article