முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதலமைச்சரின்மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்...! இணையத்தில் வெளியான முடிவுகள்....!

06:00 AM Nov 29, 2023 IST | 1newsnationuser2
Advertisement

முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு , 07.10.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . 1,27,673 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.

Advertisement

இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ .1000 / வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவி தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000 / - வழங்கப்படும். இத்தேர்வின் முடிவுகள் 01.12.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

எனவே இந்த தேர்வு எழுதிய மாணாக்கர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணாக்கர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
rs 1000Scholarshipschool studentstn government
Advertisement
Next Article