முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதல்வரின் வெளிநாட்டு பயணம்..!! பாயிண்டை பிடித்த பிரேமலதா..!! மகாவிஷ்ணுவுக்கு ஆதரவு..?

DMDK General Secretary Premalatha Vijayakanth has demanded a white statement on the Chief Minister's US visit.
06:33 PM Sep 14, 2024 IST | Chella
Advertisement

முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளர்.

Advertisement

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதல்வர் வெளிநாட்டு பயணம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் வெளிநாடுகளில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளின் விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு வந்த திட்டங்கள் என்ன..? எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்..? என்பது போன்ற விவரங்களை மக்களுக்கு சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்டதும், மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் தவறில்லை. மகாவிஷ்ணு விவகாரம் பூதாகரமானதை பார்த்தேன். ஆனால், அது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது என்றே கருதுகிறேன்.

அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனின் பேச்சு எதார்த்தமாக உள்ளது. ஆனால், அதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பூதாகரமாக மாற்றியுள்ளன. மது ஒழிப்புக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது” என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Read More : கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எப்படி வங்கியில் மாற்றுவது..? கட்டணம் எவ்வளவு..? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!

Tags :
தேமுதிகபிரேமலதாமுதல்வர்விஜயகாந்த்
Advertisement
Next Article