முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்..!! INDIA கூட்டணியில் இணைய அழைப்பா..?

Chief Minister Mukherjee Stalin met Chandrababu Naidu, who will be sworn in as the new Chief Minister of Andhra Pradesh, at Delhi Airport.
01:55 PM Jun 05, 2024 IST | Chella
Advertisement

டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று (புதன்கிழமை) காலை முதலமைச்சர் முக.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement

இதனை ஒட்டி தமிழகம், புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கும் முதல்வர் முக.ஸ்டாலின், இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி சென்றார். அப்போது, டெல்லி விமான நிலையத்தில் ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை முதல்வர் முக.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். NDA கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த சந்திரபாபு நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் முதல்வர் முக.ஸ்டாலின்.

Read More : வெற்றியோ, தோல்வியோ எழுச்சியுடன் சம்பவம் செய்த காங்கிரஸ்..!! பாஜகவை திணற வைத்த தமிழர் சுனில்..!!

Tags :
chandra babu naiducm stalin
Advertisement
Next Article