அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!! சிறப்பம்சங்கள் என்ன..?
ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் செயல்பாட்டு வந்ததன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணையின் கீழ்ப்புறத்தில் இருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபநீர், 6 நீரேற்று நிலையங்கள் வழியாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 நீர் நிலைகள் நிரப்பப்படும்.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மூன்று மாவட்டங்களிலும் உள்ள 24,468 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 80% பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் திட்டத்தை திறந்துவைக்கவில்லை என அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்தத் திட்டத்தை தொடங்க வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா..? அப்படினா இதை பண்ணுங்க..!!