மூதாட்டிக்கு ரூ.2,000 வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..! தேர்தல் விதிமீறல் புகார்…!
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்மரம் காட்டி வருகின்றனர். பல முக்கியத் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திமுக சார்பில் தூக்குடியில் போட்டியிடம் நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் தமிழக முதலவர் ஸ்டாலின். இன்று காலை தூத்துக்குடியில் உள்ள ராஜாஜி பூங்காவில் நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிறகு காமராஜர் மார்க்கெட்டிற்கு சென்று அங்கிருக்கும் மக்களிடம் நலம் விசாரித்ததுவிட்டு, காய்கறி விலை குறித்தும், மக்களுக்கு இருக்கும் குறைகள் குறித்தும் விசாரித்துவிட்டு, திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதியை வெற்றி பெற செய்யவேண்டு என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் காமராஜர் மார்க்கெட்டில் வாக்கு சேகரிப்பின் போது சந்தைக்கு வந்த மேரி என்ற மூதாட்டி காய்கறி வாங்குவதற்காக வைத்திருந்த 1,500 ரூபாய் தொலைந்து விட்டதாக முதல்வரிடம் கதறி அழுதுள்ளார், உடனே அவருக்கு திமுக சார்பில் ஆறுதல் கூறி 2,000ரூபாய் கொடுத்தாக கூறப்படுகிறது. இந்த பணம் கொடுப்பது தேர்தலின் விதிமீறல்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.