For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முதல்வர் ஸ்டாலினுக்கு இதுகூட தெரியல!… சுட்டிக்காட்டி விமர்சித்த Annamalai!

06:00 AM Mar 10, 2024 IST | 1newsnationuser3
முதல்வர் ஸ்டாலினுக்கு இதுகூட தெரியல … சுட்டிக்காட்டி விமர்சித்த annamalai
Advertisement

Annamalai: மதுரை பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு வீடு வழங்கியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னப் பிள்ளை 2000ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாய்பாயிடம் இருந்து ஸ்த்ரிசக்தி புரஸ்கார் விருது பெற்றவர். விருது வழங்கும்போது சின்னப் பிள்ளை காலில் வாஜ்பாய் விழுந்து வணங்கியது அப்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக இருந்தது. 2019ஆம் ஆண்டு சின்னப் பிள்ளைக்கு பதமஸ்ரீ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தற்போது வீடு இல்லாமல் மூத்த மகனில் வீட்டில் வசித்து வருகிறார் சின்னப் பிள்ளை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை சந்தித்துப் பொன்னாடை போர்த்தி பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் வீடு வழங்கப்படும் என உறுதி அளித்ததாகவும், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்த சின்னப் பிள்ளை, தனக்கு வீடு கட்டித் தருமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்தார்.

இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குச் சென்ற நிலையில், புதிய வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்மஸ்ரீ சின்ன பிள்ளை பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “கவலை வேண்டாம்.. ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்பட உள்ளது. மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப் பிள்ளைக்கு புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்காக மதுரை சின்னப்பிள்ளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியாக செயல்படுத்தப்படும் திட்டம் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பது வேதனைக்குரியது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அம்மாவுக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்யப் கிளம்பியிருக்கிறார் எனவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

மேலும், “மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியுள்ளார். அது குறித்துப் பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா. இவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்” என்று அண்ணாமலை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

Readmore: குட்நியூஸ்!… NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!… வெளியான முக்கிய அறிவிப்பு!

Tags :
Advertisement