முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உயிரை பலி கொண்ட பட்டாசு ஆலை விபத்து... ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு..!!

Chief Minister M. K. Stalin has ordered to provide financial assistance of Rs. 3 lakh to the family of Govindaraj who died in the firecracker factory accident in Virudhunagar.
03:49 PM Sep 19, 2024 IST | Mari Thangam
Advertisement

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை குகன்பாறை செவல்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் அறையில் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (19) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த செவல்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ் (24) உயிரிழந்தார். மேலும் 70 சதவீதம் தீக்காயமடைந்த குருமூர்த்தி சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (19-9-2024) காலை சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் அப்பையநாயக்கன்பட்டி கிராமம், ஆகாஷ் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 27) த/பெ. கணேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் நூறு சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் குருமூர்த்தி (வயது 19) த/பெ. பாண்டி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 இலட்சம் ரூபாயும், நூறு சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் குருமூர்த்தி என்பவருக்கு 2 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Read more ; சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்.. விஜய் அரசியலுக்கு வர இதுதான் காரணமா? முன்னாள் அமைச்சர் சொன்ன மேட்டர்..

Tags :
firecracker factorym. k. stalinvirudhunagar
Advertisement
Next Article