'எனக்கே தகவல் இல்லை..!!' தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் பதில்..!!
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு அதுகுறித்த எந்த தகவலும் வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார். அமெரிக்கா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
தமிழ்நாடு அமைச்சரவையில் சீனியர் உட்பட மொத்தம் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்து நான்காவது ஆண்டில் பயணித்து வருகிறது. இந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போதைய அமைச்சரவை மாற்றம் மிகப் பெரிய அளவில் இருக்கும் என தகவல்கள் கசிந்தனர். மேலும், அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானாது.
இந்நிலையில், சேப்பாக்கத்தில் ரூ.5 கோடி செலவில் தரம் உயரத்தப்பட்ட மாநில அவசர கால பேரிடர் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம், அமெரிக்க பயணம், முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். தொடர்ந்து,, தமிழக அமைச்சரவையில் மாற்றமா என தகவல் வருகிறதே என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதற்கு, ‘எனக்கு தகவல் வரவில்லை’ என பதிலளித்துள்ளார்.
Read more ; உஷார்..!! பெண்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் UPI பரிவர்த்தனைகள்..!!