For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"இந்திய மக்கள் வறுமையில் இல்லை..!!" - பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன்

Chief Economic Adviser Ananda Nageswaran has said that Indian people are not in poverty and there is a possibility of increasing foreign direct investment and company expansion funds.
04:18 PM Jul 22, 2024 IST | Mari Thangam
 இந்திய மக்கள் வறுமையில் இல்லை        பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன்
Advertisement

இந்திய மக்கள் வறுமையில் இல்லை எனவும், அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார தலைமை ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மத்திய பொது பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்தார். தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில்,  பொருளாதார தலைமை ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை, மாறாக முதலீடு செய்து வருகின்றன. இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும். தொழில் மற்றும் உற்பத்தித் துறை கூடுதல் வளர்ச்சியை எட்டும்” இவ்வாறு ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

Read more ; வீடு கட்டும் கனவை எளிதாக்கிய அரசு..!! இனி உடனடி அனுமதி..!! தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!!

Tags :
Advertisement