கொண்டைக்கடலை நல்லது தான், ஆனால் இவர்கள் எல்லாம் சாப்பிடவே கூடாது..
நோய் இல்லாத மனிதனை பார்ப்பதேதற்போது உள்ள காலகட்டத்தில் அரிதாகி விட்டது. அந்த அளவிற்கு வகை வகையான நோய்கள் பரவி விட்டது. அந்த வகையில் அநேகருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது தைராய்டு தான். பொதுவாக ஒரு நோய் வந்த உடன் மருதுவர்கள் கூறும் ஒரு காரியம் என்றால், அது என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது தான். அதே போல், தைராய்டு வந்துவிட்டால் உடனே மருத்துவர்கள் எந்த உணவுகளை எல்லாம் சாப்பிட கூடாது என்று ஒரு பெரிய லிஸ்டே போடுவது உண்டு.
உடலில் தைராய்டு இருந்தால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். பொதுவாக தைராய்டு கண்டறியப்பட்டால், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் ஆகியவற்றை கட்டாயம் சாப்பிட கூடாது என்று பலர் கூறுவது உண்டு. இது குறித்து பிரபல மருத்துவர் கூறும்போது, பொதுவாக முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவரில் கோய்ட்ரோஜெனிக் என்ற கலவை உள்ளது. எனவே இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன்களின் சமநிலை அழிந்து விடும். அந்த வகையில், முட்டைக்கோஸ் அல்லது காலிஃபிளவர் மட்டுமல்ல, ப்ரோக்கோலி, கொண்டைக்கடலையும் கூட தைராய்டை அதிகரிக்கும்.
தைராய்டு இருப்பவர்கள் இந்த பொருள்களை இல்லாமல் மேலும் சில பொருள்களை சாப்பிடக் கூடாது. அவை, பால், சீஸ், சர்க்கரை, சமைத்த கேரட் கறி, பழுத்த வாழைப்பழங்கள், உலர் பழங்கள், தேன், மாவு ரொட்டி, வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு, இனிப்புகள் ஆகியவை ஆகும். இந்த உணவுகளை நாம் சாப்பிடும்போது உடலில் உள்ள கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கின்றது. இது தைராய்டு பிரச்சனை உள்ளவர்களின் உடலுக்கு நல்லது அல்ல. அதனால், மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளுடன் டீ, காபி, சாக்லேட், குளிர்பானங்கள் ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.
காலிஃபிளவர் சாப்பிடுவதால் T3, T4 ஹார்மோன்களின் அளவுகளை சமநிலையை பாதிப்பதுடன், காலிஃபிளவரில் உள்ள அதிகப்படியான கால்சியம், சிறுநீரக கற்களை உருவாக்கும். எனவே, முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவரை நன்கு வேகவைத்து, அளவாக சாப்பிடுவது நல்லது.
Read more: வெந்தையத்தை இப்படி சாப்பிட்டால் தான், கொழுப்பை குறைக்க முடியும்.. டாக்டர் சிவராமன் பகிர்ந்த தகவல்..