உயிரை காவு வாங்கிய சிக்கன்..!! இருவர் மரணம்..!! பலர் மருத்துவமனையில் அனுமதி..!! கோழியின் இந்த உறுப்பை சாப்பிட்டால் ஆபத்தா..?
சிக்கன் என்று சொன்னாலே பலரின் வாயில் நீர் வடியும். ஏனென்றால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சிக்கனை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆரோக்கியமான உணவு என்று பலர் கருதும் உணவுகளில் சிக்கனும் ஒன்றாகும். இது மிகவும் சுவையாக இருப்பதுடன், இதில் புரத சத்தும் அதிகளவு உள்ளது. எனினும் கோழி இறைச்சி ஒரு ஆரோக்கியமான இறைச்சி என்றாலும், அதன் ஒரு பகுதி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதை நிரூபிக்கும் வகையில் தான், தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம், சிக்கனை சமைத்து சாப்பிட்டவர்களில் பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே செங்கல் சூளையில் பணியாற்றிய 10-க்கு மேற்பட்டோர் வாந்தி எடுத்து, மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிக்கனை சமைத்து சாப்பிட்டவுடன் தான் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
இதற்கிடையே, இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கோழியில் இருந்து நீக்கப்படும் குடல் போன்ற உறுப்புகளை வாங்கி சமைத்துள்ளனர். இதனால் தான், அவர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.