For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

08:08 AM Nov 30, 2023 IST | 1Newsnation_Admin
மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
Advertisement

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று புதிய புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கின. மேலும் மலை நீடிக்கும் என்பதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement