சென்னை To கோவைக்கு ரூ.2,890 டிக்கெட் கட்டணம்..!! தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக நினைப்பவர்கள் இதை பாருங்க..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றன. ஆனால், சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. ஏற்கனவே உள்ள கட்டணத்தோடு 20% அதிக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த கட்டணம் 100% வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் இருந்து கோவைக்கு அமர்ந்து செல்லும் வகையிலான பேருந்துக்கு ரூ.1,730 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே ஸ்லீப்பருக்கு ரூ.2,090 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசியில் அமர்ந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு 1,990 ரூபாயும், ஏசி ஸ்லீப்பருக்கு 2,460 ரூபாயும், பிரீமியர் ஸ்லீப்பர் கட்டணம் 2,890 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு உட்கார்ந்து செல்லும் இருக்கை கட்டணம் 1,690 ரூபாயும், நான் ஏசி ஸ்லீப்பர் 2,010 ரூபாயாகவும், ஏசி இருக்கை கட்டணம் 1,920 ரூபாயாகவும், ஏசி ஸ்லீப்பர் கட்டணம் 2,330 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல 1,960 ரூபாயாகவும், ஏசி இல்லாத படுக்கை வசதி 2,380 ரூபாயும், ஏசியுடன் இருக்கைக்கு 2,060 ரூபாயும், ஏசியுடன் ஸ்லீப்பருக்கு 2,800 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணங்களின் விவரங்களை https://www.toboa.in என்ற இணையதளத்தில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். தீபாவளி பண்டிகை நாட்களில் கூடுதல் சேவை இயக்குவதால் தற்போதைய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சாதாரண நாட்களில் 500 ரூபாய்க்கு கூட ஏசி ஸ்லீப்பர் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அரசுப் பேருந்து மற்றும் ரயில் கட்டணத்தை ஒப்பிடுகையில், ஆம்னி பேருந்து கட்டணம் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், 1800 425 6151 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Read More : மாநாட்டுக்கு “வெற்றிக் கொள்கை திருவிழா” என பெயர் சூட்டிய விஜய்..!! இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?