முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை ஆபத்தானவை!… எச்சரிக்கை விடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

06:12 AM Jan 13, 2024 IST | 1newsnationuser3
Advertisement

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 10 இடங்கள் அதிக விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழகத்தில் உள்ள 35 விபத்து பகுதிகளை சரிசெய்வதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் சாலை மேம் பாலங்கள் உட்பட சுமார் 900 கோடி ரூபாய் செலவில் விபத்து தடுப்பு மேம்பாட்டு பணிகள் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 10 இடங்கள் அதிக விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த மேம்பாட்டு பணிகள் மூலம் விபத்துக்கள் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் முதல் இரும்புலியூர் வரையிலான புறவழிச் சாலையில் மட்டும் 5 இடங்களில் விபத்துக்களை தடுக்கும் வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் சென்னை கோயம்பேடு – மதுரவாயல் இடையே 3 இடங்களிலும் திண்டிவனம் நெடுஞ்சாலையில்3 இடங்களில் விபத்து தடுப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற் உள்ளன. இந்த பணிகளின் மூலம் ஆரம்பத்தில் குறுகிய கால திருத்தங்களை மேற்கொள்ளப்படும் என்றும், இதனால் பயணிகள் முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாகனங்களை இயக்கும் வேகத்தைக் குறைத்து மிகவும் கவனமாக ஓட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். பொதுவாக. மேம்படுத்தப்பட்ட விளக்குகள், ராம்ப்லர்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் இருக்கும் என்றும் இன்னும் வசதிகள் தேவைப்படும் பட்சத்தில் விரிவான திட்ட அறிக்கைகளின் அடிப்படையில் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Chennai - Tirupati highwayNational Highways Authorityஎச்சரிக்கைசென்னை - திருப்பதிதேசிய நெடுஞ்சாலை ஆணையம்நெடுஞ்சாலை ஆபத்தானவை
Advertisement
Next Article