IPL Auciton 2025 : பெரிய தொகைக்கு அஸ்வினை வாங்கிய CSK..!! லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க..
கடும் போட்டிக்கு மத்தியில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது. மற்ற சில முக்கிய ஆட்டக்காரர்களையும் சென்னை அணி கைப்பற்றியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 10 ஐபிஎல் அணிகள் பங்கேற்றுள்ளன. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வின் இடம் பெற்ற நிலையில், சிஎஸ்கே அணி அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அஸ்வினை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 9.50 கோடி வரை ஏலம் கிட்ட ராஜஸ்தான் அணி அதன் பின் பின்வாங்கியது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை அணியில் மீண்டும் இணைகிறார் அஷ்வின்.
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக இந்த ஏலத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அடுத்தபடியாக நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து விடுவிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் சென்னை அணி அதிக ஆர்வம் காட்டவில்லை.
சென்னை அணி, ஏலத்தில் யாரை வாங்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தன. அர்ஷ்தீப் சிங், சாஹல், முகமது ஷமி, கே. எல். ராகுல் ஆகியோரை வாங்க சென்னை அணி முயற்சி செய்தது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. டேவன் கான்வாயை தங்களுடைய முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
அவரை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கிய சிஎஸ்கே, அடுத்ததாக ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. சாமர்த்தியமாக செயல்பட்ட சென்னை அணி, ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இறுதியாக, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
Read more ; 3 வயது குழந்தையுடன் விளையாடிய தாய்மாமன்; வீட்டில் யாரும் இல்லாத போது நடந்த கொடூரம்..