முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’ஆபத்து நெருங்கிருச்சு’..!! ’இந்தாண்டுக்குள் தமிழ்நாட்டில் இது நடக்கும்’..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

Climate change is a serious problem worldwide. This is due to the increase in global temperature. As the Earth warms, the ice in the polar regions like Antarctica and the Arctic is melting rapidly
01:30 PM Aug 07, 2024 IST | Chella
Advertisement

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது தீவிர பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு காரணம் பூமியன் வெப்பநிலை உயர்வுதான். பூமி சூடாவதால் அண்டார்டிகா, ஆர்டிக் என துருவ பகுதியில் உள்ள பனி வேகமாக கரைகிறது. இதனால் உலகம் முழுவதும் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும், முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு பக்கம் கொடூரமான மழை, வெள்ளமும், மறுபக்கம் வெப்பமும் வாட்ட தொடங்குகின்றன. இதைத்தான் காலநிலை மாற்றம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Advertisement

இப்படி இருக்கையில், பெங்களூருவை சேர்ந்த 'அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம்' எனும் ஆராய்ச்சி அமைப்பு சென்னை உட்பட பல கடலோர நகரங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, காலநிலை மாற்றத்தால், கடல் மட்டம் வேகமாக உயர்கிறது என்றும், 2040ஆம் ஆண்டுக்குள் மும்பை, புதுச்சேரியின் ஏனம் பகுதி மற்றும் தூத்துக்குடி நகரங்களின் 10% பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும் என்று எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2040-க்குள் 5-10% நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கிவிடும்.

சென்னையை தவிர கொச்சி மங்களூர், விசாகப்பட்டினம், ஹல்டியா, உடுப்பி, பூரி உள்ளிட்ட பகுதிகளும் 2040ஆம் ஆண்டுக்குள் 1-5% நிலப்பரப்பை இழந்துவிடும். இது தென்னிந்தியாவின் சுற்றுலாவை கடுமையாக பாதிக்கும். இப்படியே போனால், 2100ஆம் ஆண்டில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு கடுமையாக இருக்கும். 2050ஆம் ஆண்டில் கடலோர நகரங்களில் வசிக்கும் 80 கோடிக்கும் அதிகமான, அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவிகித மக்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் என 9 மாநிலங்கள் கடலோரத்தில் அமைந்துள்ளது. இந்த மாநிலங்களில் சுமார் 170 மில்லியன் மக்கள், அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 15.5% கடலோரமாக வசிக்கின்றனர். அதுமட்டுமின்றி, 13 பெரிய துறைமுகங்கள் மற்றும் 180 சிறிய துறைமுகங்கள் இந்த மாநிலங்களில் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் கடல் நீர்மட்டம் உயர்வால் கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு..!! மக்களே இதை கவனிச்சீங்களா..? கண்டிப்பா இருக்கணுமாம்..!!

Tags :
கடல்தமிழ்நாடுநிலப்பரப்புவிஞ்ஞானிகள்
Advertisement
Next Article