For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி...! இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை...?

06:30 AM Nov 09, 2023 IST | 1newsnationuser2
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வுப் பகுதி      இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை
Advertisement

தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement