இந்த App இருந்தால் போதும்.. இனி சென்னையில் parking பிரச்சனை இருக்காது..!! செம பிளான்..
சென்னையில் தற்போது கார்கள் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் ஷாப்பிங் செல்லும் போது சொந்த வாகனங்களை பயன்படுத்துவதையே பலரும் விரும்புகிறார்கள். ஆனால், இப்படி செல்லும் போது பெரிய பிரச்சினையாக இருப்பது பார்க்கிங்தான்.
இத்தகைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வாகன நிறுத்துமிடத்தை எளிதாக கண்டறிந்து முன்பதிவு செய்ய உதவும் வகையில், புதிய திட்டம் ஒன்றை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) கையில் எடுத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
கார் வைத்திருப்பவர்கள் பார்க்கிங்க் செய்யும் இடத்தை முன் கூட்டியே புக் செய்து கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவு பெற்றுவிடும். முதல் கட்டமாக அண்ணா நகரில் செயல்படுத்தப்படும். அதன்பிறகு முக்கிய பகுதிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
எனவே இந்த ஆப் மூலம் புக் செய்யும் போது பார்க்கிங் பகுதியை பதிவு செய்து கொள்ள முடியும். தாங்கள் தேர்வு செய்த நேரம் முடிவதற்கு 10 நிமிடம் முன்பாக அவர்களுக்கு அலார்ட் செய்யப்படும். இந்த சேவை இலவசமாக இருக்காது. பகுதிக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தற்போது இடங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். 1.500 பார்க்கிங் பகுதிகள் வரை இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் டெண்டர் அடிப்படையில் செயல்படுத்தப்படும்." என்றார்.
Read more ; MLA வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி..!! சிகிச்சை பலனின்றி இன்று மரணம்..!!