முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"செல்லம் ஐ லவ் யூ" கில்லி Rerelease: தமிழக வெற்றிக் கழகத்தினர், கேக் வெட்டி கொண்டாட்டம்…!

06:55 PM Apr 20, 2024 IST | Kathir
Advertisement

நாமக்கல்லில் கில்லி திரைப்படம் ரீ- ரீலிஸ் ஆனதால் தமிழக வெற்றிக் கழகத்தினர், ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதியன்று கில்லி திரைப்படம் வெளியானது. கில்லி படம் விஜய் ரசிகர்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

Advertisement

இந்நிலையில், இப்படமானது 20 ஆண்டுகளுக்கு பின் இதே தேதியில் இன்று மீண்டும் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் ரீ ரீலிஸ் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.திரையரங்கில் கில்லி திரைப்படம் ரீ- ரீலிஸ் செய்யப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் திரையரங்கு வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய திரையரங்குகளில் விஜயின் கில்லி படம் இன்று காலை திரையிடப்பட்ட நிலையில் அனைத்து திரையரங்களும் இருக்கைகள் நிரம்பியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Read More: Bird Flu | வேகமெடுக்கும் பறவைக்காய்ச்சல்: அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..!

Tags :
gilliGilli rerelasevijay trisha movie
Advertisement
Next Article