முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கறை படிந்த பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை இப்படி சுத்தம் செஞ்சி பாருங்க.! பளீச் பளீச்.!

06:46 AM Nov 20, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

ஒவ்வொருவரும் நம் வீட்டின் ஹால் மாடி மற்றும் சமையலறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பது போல கழிவறை மற்றும் பாத்ரூம் ஆகியவற்றையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். ஏனென்றால் இவற்றில் இருந்து கிருமிகள் உருவாகி நோய்கள் ஏற்படுத்துவதை தடுக்க முடியும். நமது வீட்டின் கழிப்பறை மற்றும் பாத்ரூம் ஆகியவற்றை வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களைக் கொண்டே எவ்வாறு பளிச்சிட செய்யலாம் என பார்ப்போம்.

Advertisement

இந்த எளிமையான கிளீனரை செய்வதற்கு 2 பாக்கெட் சீயக்காய் 1 பாக்கெட் ஷாம்பூ 1/4 கப் புளித்த மோர் மற்றும் 1 ஸ்க்ரப்பர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரம் எடுத்து அதில் சீயக்காய் ஷாம்பூ மற்றும் புளித்த மோர் ஆகியவற்றை நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவை தயாரானதும் பாத்ரூம் மற்றும் கழிவறையில் உப்பு மற்றும் கறை படிந்துள்ள இடத்தில் தெளிக்க வேண்டும்.

பின்னர் ஸ்கிரப்பர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். சிறிது நேரம் ஸ்க்ரப்பர் வைத்து தேய்த்து கழுவிய பின்பு ஒரு பத்து நிமிடத்திற்கு அப்படியே ஊற விட வேண்டும். இப்போது தண்ணீர் ஊற்றி பாத்ரூமை கழுவினால் டைல்ஸ் மற்றும் டாய்லெட் பளிச்சிடும் விதத்தில் இருக்கும்.

இவற்றிற்கு கெமிக்கல்கள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் தயாரிக்கும் இது போன்ற பொருட்களை பயன்படுத்தும் போது நமது தோல் மற்றும் சுவாச நலமும் பாதுகாக்கப்படுகிறது. இவை இயற்கையான பொருள்கள் என்பதால் அரிப்பு மற்றும் எந்தவித சங்கடங்களையும் ஏற்படுத்தாது.

Tags :
Check out this way to clean the stained bathroom and toilet glistening in an unbelievable sparkling whitetoilet cleaning easy wayகறை படிந்த பாத்ரூம்
Advertisement
Next Article