லிவிங்கில் வாழ்ந்த இளம்பெண்ணுக்கு செக்..!! அந்தரங்க வீடியோவை காட்டி அடிக்கடி பலாத்காரம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
அக்ரீமெண்ட் போட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூரம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
மும்பையில் வசித்து வரும் 29 வயது இளம்பெண் ஒருவருக்கும், 46 வயதுடைய நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் லிவ்-இன்-டுகெதர் உறவில் இருந்து வந்துள்ளனர். அப்போது அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் அப்பெண்ணுக்கு தெரியவந்ததால், இந்த உறவை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஆனால், அந்த இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோவைக் காட்டி, தன்னுடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார் அந்த நபர். அதேபோல வீடியோக்களை பலமுறை காட்டி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. இந்நிலையில், கைது செய்யப்படுவதை தவிர்க்க அந்த நபர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார்.
பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரை, பெண் ஒன்றாக வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவைத் தொடர ஒப்புக்கொண்டார் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோக்களின் ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Read More : 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் 50% மானியம்..!! விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!!