For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

லாரி டிரைவருடன் கள்ளக்காதல்..!! திடீரென வெடித்த சண்டை..!! சாக்கு மூட்டையில் காதலியின் சடலம்..!! நடந்தது என்ன..?

The princess and a lorry driver Raju (A) Krishnappan (48) from the same area had an affair. As a result, Krishnappan often came to the princess's house and had fun.
02:06 PM Nov 13, 2024 IST | Chella
லாரி டிரைவருடன் கள்ளக்காதல்     திடீரென வெடித்த சண்டை     சாக்கு மூட்டையில் காதலியின் சடலம்     நடந்தது என்ன
Advertisement

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தை அடுத்த வடுக்குப்பம் பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி இளவரசி (36). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் - மனைவி இருவரும் 8 பிரிந்த நிலையில், இளவரசி குழந்தைகளுடன் வடுக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். பிறகு இளவரசிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜூ (எ) கிருஷ்ணப்பன் (48) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் இளவரசியின் வீட்டுக்கு கிருஷ்ணப்பன் அடிக்கடி வந்து உல்லாசமாக இருந்து சென்றுள்ளார். இதற்கிடையே, கடந்த 9ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென இளவரசி மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால், நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் இளவரசியின் தாய் ஆதிலட்சுமி புகார் அளித்தார். விசாரணையில் இளவரசிக்கும் கிருஷ்ணப்பனுக்கும் உள்ள கள்ளத்தொடர்பு தெரியவந்தது.

இதனால் அவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்து கிருஷ்ணப்பனை பிடித்து விசாரித்தனர். அதில், இளவரசியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன்படி, கடந்த 9ஆம் தேதி இரவு இளவரசி வீட்டிற்கு சென்ற கிருஷ்ணப்பன், இளவரசியிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தகராறில் ஆத்திரமடைந்த கிருஷ்ணப்பன் இளவரசியின் கன்னத்தில் அறைந்தார். இதில், அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்படி இருந்தும் கோபம் அடங்காத கிருஷ்ணப்பன், இளவரசியின் கழுத்தை நைலான் கயிற்றால் நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, வாழை இலையில் மூடி வைத்து இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு தமிழகம் திருவக்கரைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர், அங்குள்ள கல் குவாரி பகுதியில் சடலத்தை வீசி சென்றுள்ளார். விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் கிருஷ்ணப்பனை திருவக்கரை கல் குவாரி பகுதிக்கு அழைத்துச் சென்று, சாக்கு மூட்டையில் கட்டியிருந்த இளவரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Read More : இன்று இரவு முதல் மீண்டும் ஆரம்பம்..!! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்..!! பிரதீப் ஜான் பரபரப்பு தகவல்..!!

Tags :
Advertisement