For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

என்னை ஏமாற்றி கையெழுத்து..!! உயிரிழந்த மகன்..!! கதறி அழுத எலான் மஸ்க்..!! நடந்தது என்ன..?

A video of Elon Musk breaking down after his son is dead has gone viral.
03:38 PM Jul 24, 2024 IST | Chella
என்னை ஏமாற்றி கையெழுத்து     உயிரிழந்த மகன்     கதறி அழுத எலான் மஸ்க்     நடந்தது என்ன
Advertisement

எலான் மஸ்க், தனது மகன் மரணமடைந்துவிட்டதாகக் கூறி நா தழுதழுக்க பேச முடியாமல் உடைந்துபோகும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

Advertisement

எப்போதும் சுறுசுறுப்புடன் எதற்கும் சளைக்காமல் பதில் சொல்லும் எலான் மஸ்க், பேச முடியாமல் உடைந்து போனதே அதற்குக் காரணம். அதாவது, தனது பிள்ளைகளில், மூத்த மகன், 18 வயதாகும் முன்பே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தன்னை ஏமாற்றி அதற்கான அனுமதி கடிதத்தில் கையெழுத்துப் பெற்றதாகவும் கூறி வேதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தனது மகன் வோக் மைன்ட் வைரஸால் உயிரிழந்துவிட்டதாகவும், உலகில் இருந்து இந்த வைரஸை நிச்சயம் அழிப்பேன் என்றும் குறிப்பிட்டார். அதாவது, வோக் மைன்ட் வைரஸ் என்பது உண்மையான வைரஸ் இல்லை. பாலின மாற்று சிகிச்சையைத்தான் அதன் எதிர்ப்பாளர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள்.

தனது மகன் சேவியர், தான் ஒரு திருநங்கை என அறிவித்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெயரையும் விவியன் ஜென்னா வில்சன் என மாற்றிக்கொண்டதை தான் எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருக்கிறார். இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், இது எனது மூத்த மகன்களில் ஒருவருக்கு நேர்ந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய, என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கினார்கள். நான் கையெழுத்து போடாவிட்டால், அவன் தற்கொலை செய்துகொள்வான் என என்னை மிரட்டினார்கள்.

இது புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிக மோசமானது. இதனை ஊக்குவிப்பவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். இதனால் நான் என் மகனை இழந்தேன். எலான் மஸ்க் - மூத்த மனைவி ஜஸ்டின் தம்பதிக்கு 2004ஆம் ஆண்டு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர்தான் விவியன் என பெயர் மாற்றிக்கொண்ட சேவியர். இவர் 2022ஆம் ஆண்டு திருநங்கையாக மாறினார். தனக்கும், தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : ”கேரளாவுக்கு யாரும் போகாதீங்க”..!! மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

Tags :
Advertisement