Chhattisgarh: 13 வருடமாக நடந்த கொடூரம்.! உறவுக்கார பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நடிகர் கைது.!
சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மனோஜ் ராஜ்புத், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ராஜ்புத். இவர் நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 13 வருடங்களாக பாலியல் பலாதாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் திருமணம் செய்ய மறுப்பதை தொடர்ந்து, அந்தப் பெண் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி பழைய பிலாய் ரயில்வே ஸ்டேஷன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து நடிகர் மனோஜ் ராஜ்புத் கைது செய்யப்பட்டார். தற்போது 29 வயதான அந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்படும் போது சிறுமியாக இருந்ததால், நடிகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை அதிகாரி ராஜ்குமார் போர்ஜா" நடிகர் மனோஜ் ராஜ்புத் தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, கடந்த 13 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். மேலும் இயற்கைக்கு மாறான முறையிலும் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிவித்தார். எனினும் 2011 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் நடைமுறையில் இல்லாததால் அந்த சட்டப் பிரிவில் பல பதிவு செய்த வழக்கை மாற்றும்படி நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தி இருக்கிறது.