For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பல மொபைல் எண், சிம் வைத்திருக்கும் நபர்களுக்கு கட்டணம் வசூல்....? மத்திய அரசு விளக்கம்....

TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/numbering resources is unequivocally false
06:35 AM Jun 15, 2024 IST | Vignesh
பல மொபைல் எண்  சிம் வைத்திருக்கும் நபர்களுக்கு கட்டணம் வசூல்      மத்திய அரசு விளக்கம்
Advertisement

பல சிம்கார்டுகள் அல்லது எண்கள் வைத்திருப்போருக்கு கட்டணம் விதிக்கபட உள்ளதாக வெளியான செய்திகள் தவறானவை என ட்ராய் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

இது குறித்து மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பல சிம்கார்டுகள் அல்லது எண்கள் வைத்திருப்போருக்கும் தொலைபேசி இணைப்பு வைத்திருப்போருக்கும் கட்டணம் விதிக்கபட உள்ளதாக சில ஊடகங்களில் (அச்சு, மின்னணு, சமூக ஊடகம்) செய்தி வெளியாகி இருப்பது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தவறானதாகும் என்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தவே இது பயன்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, “தேசிய எண்ணிடல் திட்டத்தில் சீர்திருத்தம்” தொடர்பான ஆலோசனை அறிக்கை 2024, ஜூன் 6 அன்று இந்த ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதன் மீது சம்பந்தப்பட்டவர்கள் எழுத்துப்பூர்வமான கருத்துகளை 2024, ஜூலை 4-ம் தேதிக்குள்ளும் எதிர் கருத்துகளை 2024, ஜூலை 18-ம் தேதிக்குள்ளும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் திறமையான நிர்வாகம் மற்றும் நியாயமான பயன்பாட்டுக்காக வகுக்கப்பட்டுள்ளது என்று ட்ராய் விளக்கம் அளித்துள்ளது.

துல்லியமான தகவலுக்கு இந்த ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு மற்றும் ஆலோசனை அறிக்கையை (https://trai.gov.in/notifications/press-release/trai-issues-consultation-paper-revision-national-numbering-plan) என்ற இணைய தளத்தில் காணுமாறு பொதுமக்களையும், சம்பந்தப்பட்ட அனைவரையும் ட்ராய் வலியுறுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement