நாடாளுமன்றத்தில் கட்டு கட்டாக சிக்கிய பணம்.. காங்கிரஸ் எம்.பி-க்கு தொடர்பா? உண்மை என்ன?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி துவங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி மீது மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியபோது, அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கூறியதாவது; “நேற்று அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு அதிகாரிகளால் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார். இதற்கு அவையில் உடனடியாக பதில் தந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. எனவே அது உறுதி செய்யும் வரை அவரது பெயரைக் குறிப்பிடக்கூடாது” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், இதற்கு அபிஷேக் மனு சிங்வி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர், “நேற்று பிற்பகல் 12.57 மணிக்கு நான் நாடாளுமன்றத்திற்குள் வந்தேன். நான் வந்த மூன்று நிமிடத்தில் அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு நாடாளுமன்ற உணவகத்திற்கு ஒரு மணிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு சென்றுவிட்டேன். அதுமட்டுமல்லாமல் நேற்று என் கையில் வெறும் ஒரே ஒரு ரூ.500 தாளை மட்டுமே எடுத்துவந்தேன். எனவே எனது இருக்கையில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் என்னுடையது அல்ல” என்று தெரிவித்தார்.
Read more ; வயசானாலும் உங்க கண் ஷார்ப்பா தெரியணுமா..? அப்ப இந்த 6 உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க..