வேற வீட்டுக்கு மாறிட்டீங்களா? இலவசமாக ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது எப்படி?
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது கடினமான வேலையே இல்லை. ஆன்லைனில் மிக எளிதாகவே முகவரியை அப்டேட் செய்யலாம்..
இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். எந்தவொரு அரசாங்கத் திட்டத்திற்கும் தகுதிக்கான சான்றாக ஆதார் கார்டு உள்ளது. இந்த ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தாலோ அல்லது மாற்றப்பட்டாலோ அவை உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படும்.
குறிப்பாக புதிய பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றால் அந்த முகவரி ஆதார் கார்டில் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆதார் கார்டில் முகவரியை அப்டேட் செய்வது எளிதான விஷயம் தான். இப்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் முறையில் ஆதார் முகவரியை மாற்ற முடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவது எப்படி?
* My Aadhar போர்ட்டலுக்குச் செல்லவும் அல்லது https://myaadhaar.uidai.gov.in-க்குச் செல்லவும்
* ஆன்லைனில் முகவரியைப் புதுப்பிக்க முற்படும்போது புதிய ஆப்ஷன் தேர்வு செய்யலாம்
* நீங்கள் குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அதில் குடும்பத் தலைவரின் ஆதார் தவிர வேறு எந்தத் தகவலும் திரையில் காட்டப்படாது
* பிறகு, உங்களுக்கும் உங்கள் குடும்பத் தலைவருக்குமான உறவுச் சான்று ஆவணத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்
* இந்த சேவைக்கு நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்
* வெற்றிகரமாக பணம் செலுத்திய பின், சேவை கோரிக்கை எண் (SRN) வழங்கப்படும். மேலும், இந்த முகவரி மாற்றுதல் கோரிக்கை குறித்து குடும்பத் தலைவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.
* இந்த அறிவிப்பைப் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவர் My Aadhar போர்ட்டலில் லாகின் செய்து, முகவரி மாற்றுதல் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.
அவ்வாறு முகவரி மாற்றுதல் கோரிக்கையை நிராகரித்தால் அல்லது SRN எண் வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஏற்கவில்லை அல்லது மறுக்கவில்லை என்றால், கோரிக்கை முடித்துக் கொள்ளப்படும். இதுகுறித்து எஸ்.எம்.எஸ். மூலம் குடும்பத் தலைவருக்கும், உங்களுக்கும் தெரிவிக்கப்படும்.