தவெக மாநாட்டிற்கு சிக்கல்..!! விஜய் எடுத்த அதிரடி முடிவு..!! தொண்டர்கள் அதிர்ச்சி..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு காவல்துறை அனுமதியுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் செப்.23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டின் மேடை அமைய உள்ள இடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றிற்கான வரைப்படத்தை சமர்ப்பிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வருவார்கள் என முதலில் விண்ணப்பம் வழங்கியதாகவும், தற்போது தங்கள் கேள்விக்கு 50 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று பதிலளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிற்பகல் 2 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில், அனைவரும் ஒன்றரை மணிக்கே நிகழ்ச்சிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், எந்தெந்த மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. 20,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதில் எப்படி 50,000 பேர் வருவார்கள் என்றும் காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
மாநாடுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாகவும், அதை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்க்கிங் இடத்திற்கும், மாநாடு மேடை உள்ள இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும் என்றும் கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. விஜய் வந்து செல்லும் வழியில் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்றும், மாநாடு நடைபெறும் இடம் அருகே தண்டவாளமும், 6 கிணறுகளும் உள்ளதால் அந்தப் பகுதியில் மக்கள் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், காவல்துறையின் அனுமதி கிடைக்க தாமதமானதால், மாநாடு நடைபெறும் தேதியை தள்ளிவைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மாநாடு ஏற்பாடுகள் செய்ய இன்னும் குறுகிய காலமே இருப்பதால், மாற்றுத் தேதியில் மாநாட்டை நடத்த அக்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இருந்து சிலர் தவெக-வில் இணைகின்றனர் என்பதும் தவறான தகவல் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.
Read More : ‘அவர்கள் சந்தோஷமா இருக்குறது எனக்கு பிடிக்கல’..!! 3 வயது சிறுவனை கொன்ற பெண் பரபரப்பு வாக்குமூலம்..!!