For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெற்றோர்கள் கவனத்திற்கு...! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாற்றம்...! உடனே இதை செய்ய வேண்டும்

Change in Selva magal Saving Scheme
06:53 AM Oct 04, 2024 IST | Vignesh
பெற்றோர்கள் கவனத்திற்கு     செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாற்றம்     உடனே இதை செய்ய வேண்டும்
Advertisement

மத்திய அரசால் பெண்களுக்கு கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.

Advertisement

திட்டத்தின் விதிமுறை

ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இந்த கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு 10 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க இதற்கு முன் வயது 10-ஆக இருந்தது தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தலாம்.

10-வயதுக்கு முன்பாகவே பெண் இறந்தால், அல்லது வேறு எதாவது நோயால் அவதிப்பட்டு வந்தால் கணக்கை முடித்துக் கொள்ளலாம். ஆனால் முன்பு, பெண் இறந்தால் மட்டுமே கணக்கை மூட முடியும். இந்த திட்டத்தில் சேர்ந்தால் 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும். ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த விதியை மாற்றி மூன்றாவது குழந்தை பிறந்தால் கூட மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதல் இரண்டு பெண் குழந்தை இரட்டை குழந்தையாக பிறந்து இருக்க வேண்டும்.

அக்டோபர் 1-ம் தேதி முதல் மாற்றம்:

பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக அஞ்சல் அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் 'செல்வ மகள்' திட்டத்தில் அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றம் வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்கள் பேத்திகளுக்காக தாத்தா, பாட்டிகள் கணக்கு தொடங்கி இருந்தால், அது விரைவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை அந்தந்த குழந்தைகளின் அதிகாரப்பூர்வ பெற்றோர் அல்லது கார்டியன்களின் பெயரில் மாற்ற வேண்டியது கட்டாயம்.

Tags :
Advertisement