அதிர்ச்சி...! இட ஒதுக்கீடு விதிமுறைகள் மாற்றம்... UGC வெளியிட்ட வெளியிட்ட வழிகாட்டுதல்...!
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கி, இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக் குழு.
அதே போல 12பி அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளில் யுஜிசி தற்போது மாற்றம் செய்துள்ளது. புதிய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதன் படி, தேசிய கல்விக் கொள்கை- 2020 அமலானது முதல் உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தியபடி யுஜிசியின் 12பி அங்கீகார அனுமதிக்கான விதிகள் சீரமைக்கப்பட உள்ளது.
இதற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் கொண்ட வரைவு அறிக்கை யுஜிசி வலைதளத்தில் (/www.ugc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதுதொடர்பான கருத்துகளை suggestions.collegesregulation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிப்ரவரி 4-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.