உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவதில் மாற்றம்..? தமிழ்நாடு அரசு எடுத்த புதிய முடிவு..!!
தமிழ்நாட்டில் தற்போது மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 3 தவணைக்கான பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர். இந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. இந்த உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்நிலையில், பெண்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்திலேயே அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்தில் ரூ.1000 வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மாத துவக்கத்திலேயே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கினால் அந்த மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்க உபயோகமாக இருக்கும் என்பதால் மாத துவக்கத்திலேயே வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.