For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சந்திராயன் - 3ன் அடுத்த வெற்றி!. நிலவின் தென் துருவத்தில் பள்ளம் கண்டுபிடிப்பு!. பிரக்ஞான் ரோவர் அனுப்பிய படங்கள்! விஞ்ஞானிகள் உற்சாகம்!

Chandrayaan-3: Pragyan Rover Finds Ancient 160-Km Wide Crater on Moon, Details Inside
08:38 AM Sep 23, 2024 IST | Kokila
சந்திராயன்   3ன் அடுத்த வெற்றி   நிலவின் தென் துருவத்தில் பள்ளம் கண்டுபிடிப்பு   பிரக்ஞான் ரோவர் அனுப்பிய படங்கள்  விஞ்ஞானிகள் உற்சாகம்
Advertisement

Chandrayaan - 3: நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ., அகலமுள்ள பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய, சந்திரயான் - 3 விண்கலத்தின், 'விக்ரம் லேண்டர்' கலன், நிலவின் தென் துருவத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தரை இறங்கியது. மொத்தம் 26 கிலோ எடையுடன் ஆறு சக்கரங்களை உடைய, பிரக்ஞான் ரோவர் கலன் 'ரிமோட் கார்' போல அங்கும், இங்கும் வலம் வந்து ஆய்வு மேற்கொண்டது. இதன் வாயிலாக, சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, நிலவில் தடம் பதித்த நான்காவது நாடானது இந்தியா.

ரோவர் மூலம் பெறப்பட்ட படங்கள், தகவல்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ., அகலமுள்ள பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவலை ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர். ரோவர் 350 கிலோமீட்டர் தொலைவில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த போது தான், பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Readmore: கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்!. 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

Tags :
Advertisement