For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மூன்றாவது முறை ஆட்சி அமைக்க போராடும் சந்திரசேகர ராவ்…! தெலுங்கானா சட்டசபை தேர்தலூக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!

07:29 AM Nov 30, 2023 IST | 1Newsnation_Admin
மூன்றாவது முறை ஆட்சி அமைக்க போராடும் சந்திரசேகர ராவ்…  தெலுங்கானா சட்டசபை தேர்தலூக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
Advertisement

தெலுங்கானா ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து வந்ததில் இருந்து சந்திரசேகா்ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.) கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது சந்திரசேகா்ராவ் தலைமையிலான பி.ஆா்.எஸ். கட்சி.

Advertisement

தெலுங்கானாவில்ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2018 இல், BRS (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களை வென்றது மற்றும் 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறும். இதன் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படும்.

சட்டசபை தேர்தலையொட்டி 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானாவில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டில் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது,

பிஆர்எஸ் தலைவரும் முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ், அமைச்சர்-மகன் கே.டி.ராமராவ், டிபிசிசி தலைவர் ஏ ரேவந்த் ரெட்டி மற்றும் பாஜக மக்களவை உறுப்பினர்கள் பண்டி சஞ்சய் குமார், டி அரவிந்த், சோயம் உள்ளிட்ட 2,290 பேர் இந்த தேர்தலில் களத்தில் உள்ளனர்.

Tags :
Advertisement