முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு..!! புதுப்பொழிவுடன் ஜொலிக்கும் ஆந்திரா..!! எல்லாமே மாறுது..!!

With Chandrababu Naidu taking over as the Chief Minister of Andhra Pradesh, changes have started in the capital Amaravati.
08:38 AM Jun 10, 2024 IST | Chella
Advertisement

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ள நிலையில், தலைநகர் அமராவதியில் மாற்றங்கள் தொடங்கியுள்ளது.

Advertisement

அந்த வகையில், எக்ஸ் தள பக்கத்தில் இந்தியா சன்ரைஸ் ஸ்டேட் என முதல்வர் சந்திரபாபு நாயுடு படத்துடன் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக ஜூன் 12ஆம் கிருஷ்ணா மாவட்டம் கன்னாவரம் கேசரப்பள்ளி ஐடி பார்க் அருகில் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஆந்திர மாநில முதல்வர் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிஎம்ஓவின் எக்ஸ் முகப்பு பக்கத்தில் ஜெகனின் புகைப்படத்தை அதிகாரிகள் நீக்கிவிட்டு சந்திரபாபுவின் புகைப்படத்தை வைத்துள்ளனர். மேலும், இந்தியாவின் 'சன்ரைஸ் ஸ்டேட்' என்ற வாசகத்தை லோகோவாக வைத்துள்ளனர். சந்திரபாபு நாயுடு 2014-2019ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தை இந்தியாவின் சன்ரைஸ் ஸ்டேட் என புரோமோட் செய்திருந்தார். பின்னர், ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமராவதி தலைநகர் பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 5 ஆண்டுகள் பணிகள் நிறுத்தப்பட்டதால், அந்த பகுதிகள் முட்புதர்களாக மாறி செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. சாலைகள் பெயர்ந்து மண் மற்றும் ஜல்லிகற்களுடன் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

தற்போது சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அமராவதி தலைநகருக்கான பணிகள் தொடங்கியது. சந்திரபாபு முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன் தடையின்றி தலைநகர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தலைநகருக்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சுத்தம் செய்து வருகின்றனர். இதற்காக சிஆர்டிஏ ஊழியர்கள் சாலைகளில் குப்பைகளை அகற்றி வருகின்றனர். ஐஏஎஸ் குடியிருப்புகள், எம்எல்ஏ – எம்எல்சி குடியிருப்புகள், உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், நீதிபதிகள் பங்களாக்கள், கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

Tweets by AndhraPradeshCM

வி.ஐ.டி. மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களுக்கு அருகிலும் சிஆர்டிஏ அதிகாரிகள் 76 ஜேசிபிகள் மற்றும் இயந்திரங்களுடன் வேகமாக சுத்தம் செய்து வருகின்றனர். அமராவதி கட்டுமானப் பணிகளை சிஆர்டிஏ ஆணையர் விவேக் யாதவ் தலைமையில் ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Read More : வீட்டில் இருந்து மாதம் ரூ.9,250 வருமானம் பெறலாம்..!! போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..!! நீங்களும் ஜாயின் பண்ணனுமா..?

Tags :
andhraChandrababu Naiducm
Advertisement
Next Article