Alert...! தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 7 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு...!
தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 7 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இன்று தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 7 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உதவி எண்கள்:
4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக உதவி எண்கள் அறிவித்துள்ளது. நெல்லை 0462-2501012, தூத்துக்குடி - 0461-2340101, கன்னியாகுமரி - 04652-231077, தென்காசி - 04633-290548, 1070 என்ற அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம், அதே போல 1077 என்ற எண்ணையும் அவசர உதவிக்கு அழைக்கலாம், 9445869848 - வாட்சப் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.