முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிறை பறவையான சவுக்கு சங்கர்… வழக்கு மேல் வழக்கு.. மேலும் ஒரு ஷாக் கொடுத்த நீதிமன்றம்

08:05 AM May 15, 2024 IST | Baskar
Advertisement

பிரபல யூ-ட்யூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை வரும் மே 28ஆம் தேதி நீட்டித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை மே 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர்.தொடர்ந்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவரது காரில் கஞ்சா இருந்ததாக கூறி மேலும் ஒரு வழக்கு அவர் மீது தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த வழக்கிலும் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த கஞ்சா வழக்கில் அவரது கார் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் அதனை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒருநாள் மட்டும் காவல் வழங்கி அனுமதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்றுடன் சவுக்கு சங்கரின் காவல் முடிந்ததை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்நிலையில் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை மே 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதனிடையே தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும் தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அதனை மனுவாக அளிக்கும்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார். பின்னர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Read More: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி! ; விண்ணப்பங்களை கோரும் BCCI

Advertisement
Next Article